வெங்கடேஸ்வரா டைமன் ஜூவல்லரி ஷோரூம் திறப்பு

கிருஷ்ணகிரி, நவ.21: கிருஷ்ணகிரி கே.தியேட்டர் எதிரே வெங்கடேஸ்வரா ஜூவல்லரியின் மற்றுமொரு உதயமாக வெங்கடேஸ்வரா டைமன் ஜூவல்லரி திறப்பு விழா நேற்று நடந்தது.

ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் ரமேஷ் தலைமை வகித்தார். இயக்குனர் விஷ்ணு வரவேற்றார். அனுராதா ரமேஷ், குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். வெங்டேஸ்வரா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனர்கள் சுரேஷ், பலராம் மணிகண்டன், குமரன் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் பலராம் பாலாஜி ஆகியோர், ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனர். விழாவில் கான்ட்ராக்டர் ராமநாதன், அருண் ஜூவல்லரி இயக்குனர் அருண் மற்றும் தொழிலதிபர்கள், பள்ளி, கல்லூரி இயக்குனர்கள், வர்த்தக வணிக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இணை இயக்குனர் விஷால் நன்றி கூறினார். நிர்வாக இயக்குனர் ரமேஷ், இயக்குனர் விஷ்ணு ஆகியோர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் தங்கம், வெள்ளி நகைகளுக்கென்று தனித்தனி ஷோரூம் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக வெங்கடேஸ்வரா டைமன் ஜூவல்லரியின் மூன்றாவது ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது,’ என்றனர். ...

Related Stories:

>