×

போதை பழக்கத்தில் இருந்து குழந்தைகளை மீட்பது குறித்து விழிப்புணர்வு

காரைக்கால்,நவ.21: காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில், போதை பொருட்களில் இருந்து குழந்தைகளை மீட்பது குறித்து, திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில், குழந்தைகள் தின வார விழாவையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த ராயன்பாளையம் கிராமத்தில், திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா தலைமை வகித்தார். கோட்டுச்சேரி காவல் நிலைய எஸ்.ஐ குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், குழந்தைகளை கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் முறை குறித்து எடுத்துக் கூறினார்.

உதவி எஸ்.ஐ மோகன் பங்கேற்று, குழந்தைகள் போதை பொருட்களுக்கு அடிமையாவது குறித்தும், அதன் பின் விளைவுகள், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.பூவம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் விஜயராகவன், குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம், பாதுகாப்பான இணைய வழி கல்வி கற்றலுக்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : children ,
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...