×

சின்னதாராபுரத்தில் பராமரிப்பின்றி குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் பேருந்து நிலையம்

க.பரமத்தி, நவ. 21: சின்னதாராபுரம் பேருந்து நிலையத்தை முறையாக பராமாரிக்க ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் பேருந்து நிலையம் சுகாதாரமற்ற நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் பயணிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.கரூர் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 30 கிலோ மீட்டரில் சின்னதாராபுரம் உள்ளது. இங்கு க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள மற்ற ஊராட்சிகளை காட்டிலும் சுமார் 6 ஆயிரத்து மேற்பட்ட வாக்காளர் பொதுமக்கள் வசிக்கின்றனர்.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையம் பல ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றி மழை காலங்களில் துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர முடியாமல் சாலையின் ஓரத்தில் நின்று செல்ல வேண்டிய இடங்களுக்கு பேருந்துகளில் ஏறி செல்கின்றனர்.
இரவு நேரங்களில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர், மது பாட்டில்களை அப்படியே போட்டுச் செல்கின்றனர். எனவே பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதனை ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Chinnatharapuram ,citizens ,
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...