×

விபத்தில் வக்கீல் பலி

கரூர், நவ. 21: கரூர் மாவட்டம் புத்தாம்பூர் வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(39). வழக்கறிஞர். இவர் கடந்த 18ம் தேதி இரவு பைக்கில் வடுகப்பட்டியில் இருந்து பைபாஸ் சாலை நோக்கி வந்தார். அப்போது க.பரமத்தி பகுதியில் இருந்து வந்த லாரி பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயகுமார், ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Lawyer ,crash ,
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!