சிவகிரியில் மழைக்கு இடிந்த வீடுகளை தாசில்தார் ஆய்வு

சிவகிரி, நவ.21: சிவகிரியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மேலும் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதனை தாசில்தார் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மேலும் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. சிவகிரி பாகம்-2 காமராஜ் கீழ தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் செல்வராஜ், வெள்ளைச்சாமி மகன் மும்மூர்த்தி ஆகிய இருவரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த வீடுகளை சிவகிரி தாசில்தார் ஆனந்த், பேரூராட்சி செயல்அலுவலர் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, அழகுராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீட்டை இழந்து தவிக்கும் இருவருக்கும் தாசில்தார் ஆறுதல் கூறி அவர்களுக்கு அரசு நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories:

>