×

சூரசம்ஹாரம் ரத்து கழுகாசலமூர்த்தி கோயிலில் சண்முகர் சிறப்பு அபிஷேகம்

கழுகுமலை, நவ. 21: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் 5ம் நாளான்று தாரகாசூரன் சம்ஹாரம் தமிழகத்தில் எங்கும் நடைபெறாதது. இதில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோயிலில் தங்கி சஷ்டிவிரதம் இருந்து கழுகாசலமூர்த்தியை வழிபடுவர்.

இந்தாண்டு கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா மற்றும் தாரகாசூரன் சம்ஹாரம் நடைபெறாது என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.இதனால், தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு ஆகம முறைப்படி அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. சூரசம்ஹாரமான நேற்று கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் தலைமையில் மதியம் 12 மணியளவில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சனை வழிபாடுகளும் நடந்தது.  இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Shanmugar ,Kalugasalamoorthy temple ,
× RELATED தமிழக கோவில்களும் வழிபாடு முறைகளும்!!!