×

கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் தேங்கிய வெள்ளநீர் அகற்றம் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு

கோவில்பட்டி, நவ. 21: கோவில்பட்டி நகராட்சி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ள நீர் விரைந்து வழிந்தோட நகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் கடந்த 18ம்தேதி இரவு விடிய விடிய மழை பெய்தது. இதனால், இளையரசனேந்தல் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே ஓடை பகுதியில் மழை காரணமாக அதிகளவு வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் சுமார் ஒரு அடி அளவுக்கு மேலாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வழியாக சாலையில் சென்ற வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இப்பகுதியில் மழைநீர் செல்ல நகராட்சி மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை  அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார். ஓடை பகுதியில் நீர் தேங்காமல் விரைவில் வழிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஐகோர்ட்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Kadampur Raju ,flood water removal ,road ,Kovilpatti-Ilayarasanandal ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...