பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் 2 கைதிகளிடம் செல்போன் சிம்கார்டு, கஞ்சா பறிமுதல்

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் தனி கிளைச்சிறை உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தனி கிளைச் சிறை சூப்பிரண்டு முத்துராமன் தலைமையில் போலீசார் நேற்று திடீரென சிறை கைதிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிறையில் உள்ள முருகன் (என்ற) லோடு முருகன், பாசில் ஆகியோர்  அறையிலிருந்து 2 செல்போன்கள், 2 சிம்கார்டு, 2 சார்ஜர், 2 பேட்டரி, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>