லண்டன் விமானத்தில் கோளாறு விமானி சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை:  சென்னையிலிருந்து லண்டனுக்கு பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ்  விமானம் நேற்று காலை 7.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டும். விமானத்தில் 147 பயணிகள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து புறப்பட தயாராக இருந்தனர்.  

விமானம், குறிப்பிட்ட நேரத்திற்கு 5 நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. அப்போது விமானத்தில்  தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். ஆபத்தை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.  இழுவை வாகனங்கள் மூலம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே  வந்தது.

Related Stories:

>