லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அதிகாரி உட்பட 2 பேர் கைது

சென்னை: தேனாம்ேபட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் உள்ள எஸ்டேட் அதிகாரி குணசேகரனை ராமு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது வீட்டின் விற்பனை பத்திரம் வழங்க கோரியுள்ளார். அதற்கு குணசேகரன் விற்பனை பத்திரம் வழங்க வேண்டும் என்றால் ₹20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த பணத்தை ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர் வேலாயுதம் என்பவரிடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேலாயுதம் மற்றும் எஸ்டேட் அதிகாரி குணசேகரனை கைது செய்தனர்.

Related Stories:

>