பொறுப்பு அதிகாரிகளுடன் இயங்கும் காவல் நிலையங்கள்

புதுவையில் சில மாதங்களுக்கு முன்பு 14 எஸ்ஐக்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் ஏற்கனவே தாங்கள் பணியில் இருந்த அதே இடத்திலேயே தொடர்கின்றனர். அதேவேளையில் திருபுவனை, நெட்டப்பாக்கம், வில்லியனூர், காரைக்கால் டவுன், புதுச்சோி டிராபிக் (வடக்கு), மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் காவல் நிலைய அதிகாரிகளே இல்லாத அவலம் உள்ளது.  அங்கு 2ம் நிலை அதிகாரிகளும், பொறுப்பு அதிகாரிகளாக ஏற்கனவே வேறு காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சண்முகசுந்தரம் ஆயுதப்படைக்கு மாற்றலாகி 2 மாதமாகியும் புதிய இன்ஸ்பெக்டர் இல்லாததால் 3 கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>