×

100 கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறை நோட்டீஸ்

மதுரை, நவ. 20:  மதுரை விளக்குத்தூண் நவபத்கானா தெருவில் தீபாவளியன்று அதிகாலை ஒரு ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றதில், கடையின் மேல்தளம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி இறந்தனர். இதையடுத்து நவபத்கானா ெதரு, விளக்குத்தூண் பகுதியில் உள்ள பல கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் இருக்கிறதா? அங்குள்ள கட்டிடங்களில் மேல்தளங்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் எப்படி உள்ளன? விளக்குத்தூண், காமராஜர் சாலை, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள், நேதாஜி ரோடு, தெற்குமாரட் வீதி ஆகிய மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள பல கடைகளின் தன்மை, தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய தீயணைப்புத்துறை உதவி இயக்குனர் சரவணக்குமார் உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கல்யாணக்குமார் தலைமையில், நிலைய அலுவலர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் குறித்து பட்டியல் தயாரித்தனர். இதன்படி 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் குடியிருக்க தகுதியற்றவையாக உள்ளதாக கூறப்படுகிறது. அவைகளின் உரிமையாளர்களுக்கு தீயணைப்பு துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Tags : buildings ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...