×

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை கோரி பெண் மனு

திருப்பூர், நவ.20: திருப்பூர், முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த பிருந்தா (24). இவர், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது உறவினரான திருப்பூர், செல்லம் நகர் பகுதியை சேர்ந்த சின்னமருது பாண்டியன் (31) என்பவருக்கும், எனக்கும் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. அதன்பின், ஒரு மாதத்தில் சின்னமருது பாண்டியனின் தாய் மாரியம்மாள் 20 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கேட்டு துன்புறுத்தினர்.
இதுகுறித்து, எனது பெற்றோர் சென்று கேட்ட போது தங்கள் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும், அவருக்கு கூடுதலாக நகை மற்றும் பணம் வழங்க வேண்டும் எனவும் கணவர் வீட்டார் கூறி உள்ளனர். தற்போது முடியாத சூழ்நிலையில் பின்னர் தருவதாக எனது தந்தை கூறினார்.  நான் கர்ப்பமான நிலையில் பெற்றோர் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வருகிறேன். தற்போது, வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்தி வருகிறார். தற்போது எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், எனக்கு முன்பாக மலேசியாவில் வேலை பார்த்தபோது ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது. எனவே, பல பெண்கள் ஏமாற்றி, வரதட்சணை கேட்டு துன்புறுத்தும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ