நீலகிரி பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

ஊட்டி, நவ. 20:   சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை கட்டப்பாட்டில் உள்ள பூங்காக்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால், அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ துவங்கியது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், எவ்வித பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து கிருமி நாசினி, முகக்கவசம் அணிதால், சமூக இடைவெளி விட்டு இருத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், தொற்று குறைந்தபாடில்லை. நாள்தோறும் ஏராளமானவர்களுக்கு நோய் பரவி வருகிறது. இந்நிலையில், ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராாதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் அனைத்து பூங்காக்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.    இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லார், அரசு தேயிலை பூங்கா போன்ற பூங்காக்கள் பராமரிக்கப்படுகிறது. மேலும் இந்த பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின்பு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி மூடப்பட்டு செப்டம்பர் 9ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு அறிவித்த செயல்பாட்டு நடைமுறைகளின்படி அனைத்து பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி முன் ஏற்பாடு நடவடிக்கையாக நுழைவு வாயிலில் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிோதனை செய்யப்படுகிறது.    தற்போது மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகாித்து வருவதால், சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயமாக முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். எனவே, சுற்றுலா பயணிகள் பூங்காக்களுக்கு வரும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>