பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் கும்பகோணம் அருகே கோயிலில் சிலைகள் உடைப்பு

கும்பகோணம், நவ. 20: கும்பகோணம் அருகே கோயிலில் இருந்த சிலைகளை உடைத்த போதை நபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் குப்பாங்குளம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு பூசாரி, பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டி சென்றார். இந்நிலையில் அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த விஜய் (32), கதிரவன் (48) ஆகியோர் போதையில் கோயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த நவக்கிரக சாமி சிலைகளை உடைத்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு அருகில் வசித்து வரும் கோயில் நிர்வாகி சக்கரவர்த்தி, கோயிலுக்கு விரைந்து சென்று பார்த்து போது அங்கு சிலைகள் உடைந்து கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் அவர் கூச்சலிட்டத்தால் பொதுமக்களும் கோயில் முன்பு திரண்டனர். தகவல் அறிந்த நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>