×

இடைகாலில் இன்று திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆர்எஸ் பாரதிஎம்பி பங்கேற்பு

கடையநல்லூர், நவ.20:  கடையநல்லூர் ஒன்றியம் இடைகாலில் இன்று (20ம் தேதி) ஒன்றிய திமுக பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. மாநில அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.இடைகால் யாதவர் சமுதாய கூடத்தில்  இன்று காலை 11 மணிக்கு  நடைபெறும் கூட்டத்திற்கு கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் செல்லத்துரை தலைமை வகிக்கிறார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் துரை முன்னிலை வகிக்கின்றனர். மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல்காதர் வரவேற்கிறார்.

கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சிறப்புரையாற்றுகிறார். இடைகால் முன்னாள் ஊராட்சி செயலாளர் சி.எம்.குமார் நன்றி கூறுகிறார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்குமாறு கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் செல்லத்துரை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Bharathi ,RS ,activists ,DMK ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...