தென்காசியில் ஏடிஎம்மில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

தென்காசி, நவ.20:   தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்ரகுமான் மனைவி சுல்தான் பீவி(34). இவர் சில தினங்களுக்கு முன்பு தென்காசி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சென்றார். அப்போது கைப்பையில்  வைத்திருந்த நகை தொலைந்தது. வீட்டுக்கு சென்றவர் நகையை காணாததால் மீண்டும் வந்து தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. இதுகுறித்து தென்காசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆடிவேல், எஸ்ஐ மாரிமுத்து, போலீசார் வடிவேலு, கார்த்திக், அலெக்ஸ் உள்ளிட்ட தனிப்படையினர் ஏடிஎம்மில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த ஒருவர் கீழே கிடந்த நகைைய எடுத்துச் செல்வது தெரியவந்தது.  பின்னர் வங்கியின் மூலம் அவரின் முகவரியை பெற்று சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு சென்றபோது அவரே முன்வந்து நகையை வழங்கினார். போலீசார் நகையை பெற்று அப்துல்ரகுமான், சுல்தான்பீவியிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி போலீசார் சமீப காலமாக நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு சம்பவங்களில் விரைவாக துப்பு துலக்கி வருகின்றனர்.

Related Stories:

>