கே.வி.குப்பம் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

கே.வி.குப்பம், நவ.20: கே.வி.குப்பம் வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது.கே.வி.குப்பம் வட்டார வள மையத்தில் பள்ளிக்கல்வி இயக்குநரகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியறிவை வழங்குவதற்காக ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் சார்பில் வட்டார அளவில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர்கள் கண்ணன், கமலநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த பயிற்சியில் உமா, ஜெயக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் வட்டார மேற்பார்வையாளர் சாம்பசிவம், வட்டார வள மைய ஆசிரியர் மனோகரன், மாவட்ட கல்வி துறை ஒருங்கிணைப்பாளர் புஷ்பா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் முனிசாமி, கோட்ட செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>