×

கீரைசாத்து ஊராட்சியில் கட்டி முடித்து 6 ஆண்டுகளாகியும் மூடியே கிடக்கும் கிராம ஊராட்சி இ-சேவை மையம் பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை

பொன்னை, நவ.20: கீரைசாத்து ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் கிராம ஊராட்சி இ-சேவை மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னை அடுத்த கீரைசாத்து பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பட்டா, சிட்டா, உதவித்தொகை மற்றும் அரசின் சலுகைகள் பெற விண்ணப்பிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் அரசின் இ-சேவை மையம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்று கடந்த 2014ம் ஆண்டு கீரைசாத்து ஊராட்சியில் கிராம இ-சேவை மையம் கட்டப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 6 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசின் சலுகைகள் விண்ணப்பிப்பதற்கு பொன்னை மற்றும் காட்பாடி பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் இப்பகுதி அரசியல் பிரமுகர்கள் கட்டிடத்தை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருக்கின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து இக்கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்’ என்றனர்.

Tags : Grama Panchayat e-Service Center ,completion ,Keeraisathu Panchayat ,
× RELATED அரசு பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா