×

வடகாடு அருகே லோடு ஆட்டோ மீது பைக் மோதி மாணவர் பலி

புதுக்கோட்டை, நவ.20: வடகாடு அருகே லோடு ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.ஆலங்குடி தாலுகா வடகாடு அருகே உள்ள மாங்காடு ஊராட்சி சாளுவன் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அஜய் (16). இவர், மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாங்காட்டில் இருந்து வடகாடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பேப்பர் மில் ரோடு கடைவீதி அருகே சென்றபோது, சாலையோரமாக நின்ற சுமை ஆட்டோ மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், படுகாயம் அடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Student ,Vadakadu ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...