×

புதுக்கோட்டையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முதல்நாளில் 1,120 பேருக்கு பணி ஆணை

புதுக்கோட்டை, நவ.20: இலுப்பூரில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இம்முகாம் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம் 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று (நேற்று) மதியம் 1 மணி வரை 4,000 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடந்து வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 93 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும் இம்முகாமில் கலந்து கொண்டவர்களில் முதல் நாளான இன்று 1,120 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கலந்தாய்வு சுகாதாரத்துறையின் விதிமுறைகளின்படி முறையாக நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவே பெறப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கு ஒரே மாணவர் 2 மாநிலங்களில் விண்ணப்பிக்க உரிமையுள்ளது. ஆனால் தமிழகத்தின் விதிமுறைகளின் படி தமிழகத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் ஒரு மாநிலத்தில் மட்டுமே பெற முடியும். இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : employment camp ,Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...