×

மயிலாடுதுறைக்கு நாளை வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க கட்சியினர் திரண்டு வர அழைப்பு

மயிலாடுதுறை, நவ.20: மயிலாடுதுறைக்கு நாளை (21ம் தேதி) வருகை தரும் திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வரவேண்டும் என தெற்கு ஒன்றிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் கிளை செயலாளர்களுக்கான கூட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பதிபாலா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ சத்தியசீலன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஞானஇமயநாதன் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் கல்யாணம், ஜெகவீரபாண்டியன், அன்பழகன், பாலஅருட்செல்வன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நாளை (21ம்தேதி) மயிலாடுதுறைக்கு வருகை தர உள்ள இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

நாகை: நாகை நகர திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியன் வரவேற்றார். நகர செயலாளர் பன்னீர் தலைமை வகித்தார். நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் பேசினார். கூட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக அரியணையில் அமர வைக்க கடுமையாக உழைப்பது. நாகை நகரத்திற்கு நாளை (21ம் தேதி) வரும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திரளானோர் பங்கேற்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விஜயேந்திரன், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், சக்திராஜன், அருண், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினத்தில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மலர்விழி திருமாவளவன் வரவேற்றார். மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நாளை (21ஆம் தேதி) உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கொள்ளிடத்தில் இருந்து அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

Tags : Udayanithi Stalin ,parties ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...