கொரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி நடந்தது காரைக்காலில் மேலும் 11 பேருக்கு கொரோனா

காரைக்கால், நவ.20: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவது போல், காரைக்கால் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. இதுவரை 43,200 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், காரைக்காலில் நேற்று வரை கொரோனோ தொற்று 3,556ஆகவும், பலி எண்ணிக்கை 64ஆகவும் இருந்தது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வருகிறது.

கடந்த 18ம் தேதி 438 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில், மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,567ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3376 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 1276 பேர் அரசு பொது மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories:

>