×

நாகூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

நாகை,நவ.20: நாகூர் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் ஓ.எஸ்,மணியன் வழங்கினார்.நாகூர் அருகே 541 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 12 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஆர்டிஓ பழனிகுமார் வரவேற்றார். கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமை வகித்தார். டிஆர்ஓ இந்துமதி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு நாகூர் அமிர்தாநகர், பிஎஸ்என்எல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட 207 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரத்து 700 மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வருவாய்த்துறை சார்பில் 150 பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகை, சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 54 ஆயிரத்து 52 மதிப்பில் முதிர்வுத் தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் பயிர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 145 மதிப்பிலான நலத்திட்ட உதவி, மகளிர் திட்டம் சார்பில் 64 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான கடன் தொகை, வேளாண்மைத்துறை சார்பில் 54 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 747 மதிப்பில் நலத்திட்ட உதவி என மொத்தம் 541 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரத்து 644 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன், திருமருகல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகை தாசில்தார் ரமாதேவி நன்றி கூறினார்.


Tags : tsunami victims ,Nagore ,
× RELATED அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில்...