×

சென்னை முழுவதும் 72 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்: போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னை முழுவதும் 72 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகுடேஸ்வரி விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், வெற்றிவேல் மத்திய குற்றப்பிரிவுக்கும், ரஞ்சித்குமார் பெரும்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஜெ.ஜெ.நகர் குற்றப்பிரிவுக்கும், சதீஷ் அரும்பாக்கம் குற்றப்பிரிவுக்கும்,  தாமரை விஷ்ணு நுண்ணறிவு பிரிவுக்கும், ராஜசேகரன் கானத்தூர் குற்றப்பிரிவுக்கும், வெங்கடேஷ் பிரபு கொளத்தூர் குற்றப்பிரிவுக்கும், ஜெயசங்கர் மாம்பலம் குற்றப்பிரிவுக்கும், மீனாட்சி சுந்தரம் மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கிற்கும், ஜானகிராமன் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவுக்கும், ஐயப்பன் அயனாவரம் சட்டம் ஒழுங்கிற்கும், தர்மா அரசு பொது மருத்துவமனைக்கும், செழியன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், புருஷோத்தமன் வடபழனி சட்டம் ஒழுங்கிற்கும், கணேஷ் பாண்டியன் உயர் நீதிமன்றம் சட்டம் ஒழுங்கிற்கும், ரகுநாத் கோட்டை சட்டம் ஒழுங்கிற்கும், ஜானி செல்லப்பா ஆயிரம்விளக்கு சட்டம் ஒழுங்கிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல், ராஜாராம் விமான நிலையத்திற்கும், விமான நிலையத்தில் இருந்த கண்ணன் தி.நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், தி.நகர் மதுவிலக்கு அமலாப்பிரிவில் இருந்த விஜயன் தேனாம்பேட்டை குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த சீனிவாசன் கோயம்பேடு குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த கோவிந்த் எஸ்பிளனேடு குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த ராஜா ராபட் காத்திருப்போர் பட்டியலுக்கும், தாம்பரம் குற்றப்பிரிவில் இருந்த வெங்கடேசன் மத்திய குற்றப்பிரிவுக்கும், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த லட்சுமி மத்திய குற்றப்பிரிவுக்கும், விரும்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த சிவகுமார் நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், துறைமுகத்தில் இருந்த உஷாராணி நுண்ணறிவு பிரிவுக்கும், திருமுல்லைவாயல் சட்டம் ஒழுங்கில் இருந்த மகேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கும், பள்ளிக்கரணை குற்றப்பிரிவில் இருந்த சாம் வின்ெசன்ட் திருமுல்லைவாயல் சட்டம் ஒழுங்கிற்கும், ஆயிரம்விளக்கு சட்டம் ஒழுங்கில் இருந்த ஸ்டாலின் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், பட்டினப்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த பீர் பாஷா மீன்பிடி துறைமுகம் குற்றப்பிரிவுக்கும், மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கில் இருந்த செந்தில் முருகன் மீனம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவில் இருந்த புவனேஸ்வரி மயிலாப்பூர் குற்றப்பிரிவுக்கும், மீனம்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த சிபுகுமார் நந்தம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், நந்தம்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த தங்கராஜ் எம்.ஜி.ஆர்.நகர் குற்றப்பிரிவுக்கும், அரும்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த சங்கர் செங்குன்றம் சட்டம் ஒழுங்கிற்கும், செங்குன்றம் சட்டம் ஒழுங்கில் இருந்த சரவணன் அரும்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தயாள் மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மனோகரன் மத்திய குற்றப்பிரிவுக்கும், செங்குன்றம் குற்றப்பிரிவில் இருந்த வசந்தா மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலையரசன் அசோக்நகர் சட்டம் ஒழுங்கிற்கும், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த தனலட்சுமி மத்திய குற்றப்பிரிவுக்கும், நந்தம்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த ஷகிலா மனநல மருத்துவமனைக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன் அபிராமபுரம் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பத்மாவதி சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், அசோக் நகர் சட்டம் ஒழுங்கில் இருந்த சுந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கும் என மாநகர காவல் துறையில் 72 இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Inspectors ,Chennai ,Commissioner of Police ,
× RELATED மாநிலம் முழுவதும் 57 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு