×

மின் கட்டண சலுகை சிறப்பு பிரிவில் மெட்ரோ ரயில் நிறுவனம் வராது: ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்  பயன்படுத்தும் மின்சாரத்திற்கு குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இதை பரிசீலித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த 2016-17ல் இருந்து 2018-19வரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம்  யூனிட்டுக்கு 7.11 முதல் 8.15 வரை வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த  கட்டணம் யூனிட்டுக்கு 7.03 என குறைக்கப்பட்டுள்ளது.சராசரி  கட்டணத்தைவிட குறைந்த கட்டணமே மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம்  வசூலிக்கப்படுகிறது. மேலும், ரயிலை இயக்குவதற்கு  மட்டுமல்லாமல், சாலைகள் இணைப்பு, ரயில் தண்டவாளம் இல்லாத இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.  

டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் அங்குள்ள மெட்ரோ ரயில்களை  சிறப்பு பிரிவில் வைத்துள்ளன. அந்த மாநிலங்கள் மெட்ரோ ரயில்களை  இயக்குவதற்கு மட்டுமே மின் சலுகை வழங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாடு மின்சார  ஒழுங்குமுறை ஆணையம் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், ஓட்டல்கள்,  ஏடிஎம் ஆகியவற்றுக்கும் மின்சாரத்தை குறைந்த கட்டணத்தில் தருகிறது. சென்னை  மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை  பயன்படுத்துவதால் அந்த நிறுவனத்தை சிறப்பு சலுகை பிரிவில் சேர்க்க  முடியாது, என தெரிவித்துள்ளது.

Tags : Metro Rail ,announcement ,Regulatory Commission ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...