×

எஸ்எம்ஏ பள்ளியில் புத்தக வாரப் போட்டிகள் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை, நவ. 13: பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி, எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் புத்தக வார போட்டிகள் இணையதள வழியாக நடந்தது. ‘வாசிப்பே வழிநடத்தும்’ எனும் மையக்கருவுடன் நடந்த விழாவிற்கு பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நர்சரி குழந்தைகள் நீதிபோதனை கதைகளான வானவில் மீன்கள், தெனாலிராமன், பீர்பால், அலாவுதீன், சிண்டர்லா நீதிக்கதை புத்தகங்களில் இடம்பெறும் ஆடை அணிகலன்களுடன் பாத்திரப்படைப்பாக காட்சிப்படுத்தி போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிக்கான கதையும், கருவும் உயிரினங்களிடம் நட்பு பாராட்டுவோம், விலங்குகளின் சுதந்திரம் காப்போம், பிளாஸ்டிக் ஒழிப்பு, பஞ்சதந்திர கதைகள், அரேபியன் நைட்ஸ், நீதிக்கதைகளின் தொகுப்பு உள்ளிட்ட புத்தகங்ளில் இருந்து தயாரிக்கப்பட்டன.

இணையவழிப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களில் சிபிஎஸ்இ மாணவர்கள் முதல் வகுப்பில் ஜெயஹர்சித் ஜெர்வின், ரகுவசந்த், 2ம் வகுப்பில் ருத்ராசன்வி, ஆகாஷ், அவினேஷ்வரன், மெட்ரிக் பள்ளியில் முதல் வகுப்பில் செல்வசஜின், தீப தர்ஷசுதன், சக்திகவி, 2ம், 3ம், 4ம் வகுப்புகளில் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் இணையவழி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் பாகிரதி, கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : competitions ,SMA School ,
× RELATED குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி