×

நல்லாசிரியர் விருதுபெற்ற வேப்பலோடை அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா

குளத்தூர், நவ.13: நல்லாசிரியர் விருது பெற்ற வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் சேகருக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.  பள்ளியில் நடந்த இவ்விழாவுக்கு தூத்துக்குடி முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, அனைவருக்கும் கல்வி திட்ட உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் மாரிப்பாண்டி, மாவட்டத் தலைவர் ஹென்றி, கோவில்பட்டி மாவட்ட தலைவர் சூரியபிரம்மன், செயலர் கண்ணன், பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைமைச் செயலாளர் வெள்ளச்சாமி, மாவட்ட பொருளாளர் கணேசன், அம்பேத்கர் அறக்கட்டளை தலைவர் தாமோதரன், எல்லை பாதுகாப்பு படைவீரர் பால்ராஜ், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சுலோக்சனா, மணிமேகலை, சைலஜா, தூத்துக்குடி முன்னாள் மாணவர் சங்க தலைவர் செல்வா முன்னிலை வகித்தனர். விழாவில் உதவித் தலைமைஆசிரியை புளோரிடா வரவேற்றார்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பரதாழ்வார், ஜெயபால், தூத்துக்குடி மாவட்ட தலைமைஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், பொருளாளர் கார்த்திகேயன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பிரான்சிஸ்ெஹன்றி, தலைமை ஆசிரியர்கள் ராமசுப்பிரமணியன், குணசீலராஜ், கோவில்பட்டி சமூகச்சேவகர் ராகவன், அனல்மின்நிலைய இளநிலை பொறியாளர் கஜேந்திரன், ஆசிரியர்கள் கன்னையா, கிளாரன்ஸ், ராமமூர்த்தி, சிவபிரசாத், ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், ஜாய்பிரியா, சரவணன், இயற்கை அங்காடி நிர்வாக இயக்குநர் டேவிட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 இதையடுத்து அன்னை தெரசா சங்கம், வேப்பலோடை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் மன்றங்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் தலைமை ஆசிரியர் சேகருக்கு விருதுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.. ஏற்பாடுகளை அன்னை தெரசா சங்கச் செயலாளர் ஜேம்ஸ்
அமிர்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன், ஒருகிணைப்பாளர்கள் புங்கராஜ், லட்சுமிகாந்தன், துரைராஜ், பாலசுப்பிரமணியன், செல்லையா, முருகானந்தம், நாகராஜ், ஆறுமுகச்சாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை கிரேஸ்லின் நன்றி கூறினார்.

Tags : Commendation Ceremony ,Headmaster ,Government School ,
× RELATED ஓமலூர் அருகே தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு..!!