சீன பட்டாசுகளை விற்றால் கடை உரிமம் ரத்து போளூர் டிஎஸ்பி எச்சரிக்கை

போளூர், நவ.13: சீன பட்டாசுகளை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போளூர் டிஎஸ்பி அறிவழகன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். போளூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பட்டாசு விற்பனை கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், போளூர், கடலாடி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள 22 பட்டாசு கடைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

டிஎஸ்பி அறிவழகன் தலைமை தாங்கி பேசுகையில், `பட்டாசுகளை உரிமம் பெற்றுள்ள இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்,

வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி கடைபிடிக்க செய்ய வேண்டும், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும், கடை ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சீன பட்டாசுகளை விற்க அனுமதி இல்லை, மீறி விற்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும், சட்டத்தை மதித்து அனைவரும் பட்டாசு விற்பனை செய்யுங்கள்' என்றார். இதில், அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சப்- இன்ஸ்பெக்டர் ச.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Related Stories:

>