×

பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் சேத்துப்பட்டில் பரபரப்பு கழிவுநீர் கால்வாய், சாலை வசதி கேட்டு

சேத்துப்பட்டு, நவ.13: சேத்துப்பட்டில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி கேட்டு தமுமுகவினர் பொதுமக்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேத்துப்பட்டு பேரூராட்சி 11வது வார்டு கோட்டைமேடு தெருவில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து நேற்று தமுமுகவினர் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜமால் தலைமை தாங்கினார். நகர தலைவர் அக்பர், நகர செயலாளர் பசீர், பொருளாளர் இப்ராகிம், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முபாரக் முன்னிலை வகித்தனர். தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு, கழிவுநீர் கால்வாய், சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,sewerage canal ,Chetput ,road facility ,
× RELATED அர்ஜெண்டினாவில்...