விரைவில் அகற்ற அதிகாரிகள் முடிவு நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கணக்கெடுப்பு காட்பாடி ரயில்நிலையம் முதல் தமிழக எல்லை வரை

வேலூர், நவ.13: தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், தெருக்கள், ஏரி, குளங்கள் என்று ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஏராளம். அதேபோல் வேலூர்மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.

இதில் முதல்கட்டமாக காட்பாடி ரயில்நிலையம் தொடங்கி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையான தமிழக-ஆந்திர எல்லை வரையில் எத்தனை இடங்களில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளது. எத்தனை மீட்டர் வரையில் ஆக்கிரமித்துள்ளனர். மின்கம்பங்கள் எத்தனை உள்ளது. என்று கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று காட்பாடி அடுத்த கல்புதூரில் சித்தூர்- கடலூர் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பொறியாளர்கள் கணக்கெடுப்பு பணி நடத்தினர்.

இதுகுறித்து காட்பாடி உதவி கோட்ட பொறியாளர் சுகந்தி கூறுகையில், ‘நெடுஞ்சாலைத்துறை மூலம் காட்பாடி ரயில்நிலையம் முதல் தமிழக- ஆந்திர எல்லை வரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து திருவலம்- காட்பாடி சாலை, வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்தி, கற்கம்பங்கள் நடப்பட உள்ளது.

மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் குறித்த துல்லியமான அளவுகளில் வரைபடம் வரைந்து ஆவணம் பாதுகாத்து ைவக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஆக்கிரமிப்புகள் அகற்ற சர்வேயரை தேடிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. எனவே இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories:

>