×

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் கே.எம்.எஸ்.ஹக்கீம் இல்ல திருமண விழா

திருச்சி, நவ.13: திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம் கல்யாண பிரியாணி நிறுவனரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவருமான கே.எம்.எஸ்.ஹக்கீம் புதல்விகள் பெமினாபேகம்-முஹம்மது பயாஸ் மற்றும் ரூபினாபானு-டாக்டர் முகமது ஹக்கீம் ஆகியோரது திருமணங்கள் திருச்சி வி.எஸ்.எம்.திருமண மஹாலில் நடைபெற்றது. இத்திருமண விழாக்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பரஞ்ஜோதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, எம்பி., திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, பெரியண்ணன் அரசு, அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் அவரது தந்தை சின்னச்சாமி, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மதிமுக மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா, தேமுதிக மாநில மாணவர் அணி செயலாளர் விஜய்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், மாவட்ட தலைவர் தர், திருச்சி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் குரு.ரெங்கநாதன், தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையார், மாநில மருந்து வணிகர்கள் சங்க தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில், செயலாளர் காஜா நஜுமுதீன், சிஎஸ்ஐ திருச்சி, தஞ்சை திருச்சபை பேராயர் டாக்டர் சந்திரசேகர், ஆற்காடு நவாப் கன்டோன்மென்ட் செயல் அதிகாரி நௌஷாத், சாரதாஸ் ரோஷன், மங்கள் அண்டு மங்கள் மூக்கப்பிள்ளை, லயன் டேட்ஸ் பொன்னுதுரை, பத்மா பழமுதிர்சோலை ரமேஷ், பெமினா பக்கர், கல்யாணி கவரிங் உமாநாத், ‘சங்கீதா’ ராஜ்குமார், ஆக்ஸினா குழும சேர்மன் ஜெயகர்ணா, நியூ லெக்ஷ்மி ஜுவல்லரி ஈஸ்வரமூர்த்தி, ரத்னா ஸ்டோர் பர்ம் ரவிசங்கர், கண்ணப்பா ஓட்டல் கண்ணன், அஜந்தா ஓட்டல் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கே.எம்.எஸ்.ஹக்கீம், கே.எம்.எஸ்.அபுதாகீர், கே.எம்.எஸ்.மைதீன், திருப்பூர் தொழிலதிபர் அபுபக்கர், திருச்சி ஏபிசி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அலிம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags : KMS Hakeem ,Bargaining Council of Chambers ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் நியமனம்