×

வர்த்தர்கள், பொது மக்கள் மகிழ்ச்சி மங்கல்கிராமத்தில் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி

திருத்துறைப்பூண்டி, நவ.13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரம் மங்கல் கிராமத்தில் நெல்பயிரில் வேளாண் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு பண்ணை பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது. பண்ணைப்பள்ளியில் மங்கல்கிராமத்தை சேர்ந்த 25 விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சியின்போது நெல் பயிரில் விதைப்பு தொடங்கி அறுவடை வரையிலான தொழில் நுட்பங்களும், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்களும் விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. இந்த பண்ணை பள்ளி பயிற்சி இரு வாரங்களுக்கு ஒரு முறை 6 பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின்போது வயல்களில் காணப்படும் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளுடைய எண்ணிக்கையினை கணக்கிட்டு தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் அதிகஅளவு மகசூல் பெற வேண்டிய உயர் தொழில்நுட்பங்களான உயர் விளைச்சல் இரகங்களை பயிரிடுதல், விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட சத்து இடுதல், சரியான இடைவெளியில் நடவு செய்து பயிர் எண்ணிக்கை பராமரித்தல், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், நீர் மேலாண்மை போன்றவை எடுத்து கூறப்பட்டது.

இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்படும் மகசூல் இழப்பினை ஈடு செய்யும் வகையில் சாகுபடி செய்துள்ள சம்பா, தாளடி நெல் பயிரினை பாரத பிரதமரின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகள் அதற்குண்டான முன்மொழிவுப்படிவம், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலினை எடுத்து சென்று கூட்டுறவு வங்கிகள் அல்லது பொதுத்துறை வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வலியுறுத்தப்பட்டது. காப்பீடு செய்து கொள்ள கடைசி நாளான வரும் 30ம் தேதி வரை காத்திருக்காமல் உடனே காப்பீடு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட பண்ணை பள்ளி பயிற்சியில் முத்துப்பேட்டை வட்டார வேளாண்மை அலுவலர் காத்தையன் மற்றும் அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் வேம்புராஜலெட்சுமி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி ஏற்பாடுகளை முத்துப்பேட்டை உதவி வேளாண்மை அலுவலர் வினிதா செய்திருந்தார். அட்மா திட்ட உதவி மேலாளர் சவுமியா நன்றி கூறினார்.

Tags : Traders ,village ,Mangal ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...