×

கஜா புயலால் சிதைந்த வீட்டை ரூ. 1.50 லட்சத்தில் புதிதாக கட்டிக் கொடுத்த நண்பர்கள்

புதுக்கோட்டை, நவ. 13: புதுக்கோட்டையில் கஜாபுயலால் இடிந்து விழுந்த ஆட்டோ டிரைவரின் வீட்டை அவரது பள்ளிக்கால நண்பர்கள் ரூ.1.50 லட்சத்தில் புதிதாக கட்டிக்கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடத்த 2018 ம் ஆண்டு கஜா புயல் தாக்கியது . இதில் பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது. இதேபோல் புதுக்கோட்டை மச்சுவாடி அருகே கொட்டகைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (44). ஆட்டோ ஓட்டுனரான இவரது குடிசை வீடு ஏற்கெனவே பாழடைந்து கிடந்த நிலையில் கடந்த 2018ல் வீசிய கஜா புயலால் முற்றிலும் சேதமடைந்தது. மனைவி, இரு மகள்கள், இரு மகன்களுடன் மொத்தம் 6 பேர் இடிந்துப் போன அதே வீட்டுக்குள் மிகுந்த சிரமத்துக்கிடையே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் முத்துக்குமாரின் பள்ளிக் கால நண்பர்கள் அவரது வீட்டுக்குச் சென்றபோது அந்த வீட்டின் அவலம் தெரியவந்துள்ளது. உடனடியாக செல்லிடப்பேசியில் இடிந்த வீட்டைப் படம் எடுத்த நண்பர்கள் உடனடியாக தாங்கள் ஏற்கெனவே வைத்திருந்த வாட்சப் குழுவில் படத்தை பதிவிட்டனர். குழுவில் இருந்தவர்கள் நண்பனின் குடும்பம் படும் அவதியை உணர்ந்து, மனம் உருகிய நண்பர்கள் தங்களின் வசதிக்கேற்ப தொகையைத் திரட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வீட்டின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ரூ. 1.50 லட்சம் மதிப்பில் சிறிய அளவிலான கான்கிரீட் வீடு கட்டப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் அந்த வீட்டில் முத்துக்குமார் குடும்பம் மகிழ்ச்சியுடன் குடிபுக முடிவு செய்துள்ளார்.

Tags : House ,storm ,Gajah ,friends ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்