×

அரியாணிபட்டி கிராமத்தில் நெல் சாகுபடியில் தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி

புதுக்கோட்டை, நவ.13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகளுக்கு தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்து பயிற்சி அதியாணிபட்டி கிராமத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கந்தர்வகோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அன்பரசன் அனைவரையும் வரவேற்றார்/ கந்தர்வகோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் பேசும்போது, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தவும், உடனடியாக நெற்பயிருக்கு காப்பீடு செய்திடவும், உரம் வாங்கும்போது தவறாது ஆதார் அட்டையினைக் கொண்டு செல்லும்படியும் கேட்டுக் கொண்டனர். வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டங்கள் மோகன்ராஜ், திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் விதை உற்பத்தி குறித்து பேசினார்.

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்க ஆலோசகர் திருப்பதி, முக்கிய இடுபொருட்களான விதை தண்ணீர் உரம், பயிர்ப் பாதுகாப்பு, தொழில்நுட்பம் கடன் இயந்திரங்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மானிய விலையில் வழங்கப்படுவதையும், திருந்திய நெல் சாகுபடி நுட்பங்களையும் விளக்கினார். நெல் இயந்திர நடவு திருந்திய நெல் சாகுபடி குறித்து சிறப்பான முறையில் கருத்துக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலந்துகொண்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை அலுவலர் சவிதா நன்றி கூறினார்.

Tags : village ,Ariyanipatti ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...