×

தீபாவளி பொருட்கள் வாங்க பெரம்பலூர் நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்


பெரம்பலூர், நவ.13: தீபாவளி பண்டிகையையொட்டி சுற்று வட்டார கிராம பொது மக்கள் திரண்டதால் பெரம்பலூர் நகரம் திக்குமுக்காடியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நாளை (14ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. இதனையொட்டி புத்தாடை வாங்கவும், இனிப்பு பலகாரங்கள் வாங்கவும், குழந்தைகளுக்கு பட்டாசு மத்தாப்பு வாங்கவும் பல்லாயிரக்க ணக்கான பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக பெரம்பலூர் நகரை நோக்கிப் படை யெடுத்து வருவதால் பெரம்பலூர் நகரம் தினம் தினம் திக்குமுக்காடி வருகிறது.

குறிப்பாக பெரம்பலூர் நகரின் பிரதான வர்த்தகக் கேந்திரமாக விளங்கும் பெரியக் கடைவீதி, போஸ்ட் ஆபிஸ் தெரு, என்எஸ்பி ரோடு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஒவ்வொரு கடைகளின்முன்பும் திரண் டு தீபாவளிப் பண்டிகைக் கான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதில் பெரியகடைவீதி பகுதியில் நேற்று நாள் முழுவதும் மக்கள் கூட்டம் பல்லா யிரக்கணக்கில் திரண்டு நின்றதால், பெரம்பலூர்- துறையூர் சாலையில்போக்கு வரத்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை ஸ்தம்பித்து, வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்துசென்று கொண்டிருந்தன. பழைய பஸ் ஸ்டாண்டு காந்தி சிலை ரவுண்டானாவைச் சுற்றிலும், என்.எஸ்பி.ரோடு, பள்ளிவாசல் தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம், புத்தாடைகளை வாங்க இனிப்பு பலகாரங்களை, வாங்க அலை மோதியதால் நேற்று தீபாவளி திருவிழா களை கட்டத் தொடங்கியது.

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை பறித்துச் செல்லும் ஆசாமிகள் அதிகம் சுற்றுவார்கள் என சந்தேகித்ததால் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் உத்தரவின்பேரில் பெரம்பலூர் டிஎஸ்பி ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோரது மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழிப்பறி, பிக்பாக்கெட் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையரைக் கண்காணிக்க பெரம்பலூர் நகரில் புதுபஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதில் இருந்தபடி போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளை கண்காணித்தனர்.

மேலும் பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கோபுரத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாகன போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் பண்டிகைக்கான பொருட்களை வாங்க இறுதிநாளான இன்றும் அதேபோல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட உள்ளதால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும், போக்குவரத்து வசதிகளையும் செய்துகொடுக்க எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Crowds ,Perambalur ,Diwali ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...