×

கலெக்டர் ஆலோசனை சாலை மறியல் போராட்டம் நெற்பயிரில் களைசெடிகளால் 50% வரை மகசூல் இழப்பு

காரைக்கால், நவ.13: காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு, வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி தலைமை வகித்தார். தொடர்ந்து, வேளாண் அறிவியல் நிலைய உழவியல்துறை தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் முகாமில் கலந்துகொண்ட விவசாயிகளிடம் பேசியதாவது: நெற்பயிரில் வளரும் தேவையற்ற களைகள் நிலம் மற்றும் நீர் ஆதாரங்களுக்கு இடைஞ்சலாக பயிர் உற்பத்தியை குறைப்பவைகளாக அமைகின்றன. மேலும் களைகளினால் நெற்பயிரில் சுமார் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.   களைகள் பயிர்களின் சத்துகள், ஈரப்பதம், இடைவெளி மற்றும் சூரிய ஒளி இவைகளுக்கு போட்டியிட்டு எடுத்துக் கொள்கின்றன. நெற்பயிரில் 20 வகையான களைகள் உள்ளன. அதாவது புல்வகை, கோரைவகை மற்றும் அகன்ற இலைகள் ஆகியன காணப்படுகிறது. களைக்கொல்லிகளை முழுவதுமாக உபயோகித்து களை நிர்வாகம் செய்வது முடியாத ஒன்றாகும். எனவே உழவியல்முறை, கருவிகளைக் கொண்டு மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்தி நிர்வாகம் செய்வதுதான் ஒருங்கிணைந்த களை நிர்வாகம். கோடை உழவு, களைகளை எடுத்தல், கோனோவீடர், பவர்வீடர், உயிரியல் முறை மற்றும் ரசாயன முறைகளில் களைகளை கட்டுப்படுத்தலாம் என்றார். பயிற்சியின்போது நெற்பயிரில் வளரும் பலவகையான களைகள் அடையாளம் காண்பித்து, அதன் குணாதிசியங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் களைகளை கட்டுப்படுத்த பயன்படும் களைக்கொல்லியை பயன்படுத்தும் முறைகள் பற்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு