×

வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16ம் தேதி வெளியீடு

கரூர், நவ. 13: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2021 பணிகள் மேற்கொள்ளப்படடு வருகிறது. இது தொடர்பாக வரும் 16ம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2021, நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் சிறப்பு முகாம்கள் எதிர்வரும் நவம்பர் 21, 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தினங்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள வாக்காளர்கள் குறிப்பாக 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்க படிவம்6ஐ அளிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களிடம் படிவம் 7, 8 மற்றும் படிவம் 8ஏ அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது