திருவள்ளுவர் மைதானத்தில் தீபாவளி தரைக்கடைகள் துவக்கம்

கரூர், நவ. 13: கரூரில் ஆண்டுதோறும் தீபாவளியின் போது வரும் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவள்ளுவர் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்க தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தீபாவளிக்கு முதல் மூன்று நாட்கள் இந்த பகுதி வளாகத்தில் வியாபாரம் நடைபெறும் வகையில் கடைகள் அமைத்து தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளுவர் மைதானத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கித் தரப்பட்டன. இதன்படி கடைகளை பெற்ற வியாபாரிகள் நேற்று காலை தங்களின் ஜவுளி ரகங்கள் உட்பட அனைத்து விற்பனை பொருட்களையும் கடைகளில் வரிசைப்படுத்தி தயார் நிலையில் இருந்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>