×

தீபாவளி பர்சேஸ் தீவிரம் விருதுநகர் கடை வீதிகளில் குவியும் மக்கள்

விருதுநகர், நவ. 13: நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் வேகம் குறைந்திருந்தாலும், நின்றபாடில்லை. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வேலையிழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் மக்கள் அவரவர் சக்திக்கு குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்து தீபாவளியை கொண்டாட களம் இறங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக கடைவீதிகளில், துணிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திரு வில்லிபுத்தூர், ராஜபாளையம் பஜார்களில் உள்ள துணிக்கடைகள், ரெடிமேட் கடைகள், சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று விருதுநகரில் அக்ரஹாரம் தெரு, மெயின்பஜார், தேசபந்து மைதானம், கச்சேரி ரோடு பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், ரெடிமேட் கடைகள், நடைபாதை துணிக்கடைகளிலும் வியாபாரம் களைகட்டி உள்ளது. கடைவீதிகளில் வியாபாரிகளும், துணி வாங்க வரும் மக்களும் மாஸ்க் அணிவதன் அவசியத்தை நகராட்சி, சுகாதாரத்துறை, போலீசர் அறிவுறுத்தி மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

Tags : streets ,Virudhunagar Shop ,
× RELATED மக்கள் போராட்டம் எதிரொலி:...