×

அதிகாலை பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

தேவாரம், நவ. 13: தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஊர்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கோம்பை, பண்ணைப்புரம், கூடலூர், கம்பம், உத்தமபாளையம், ஹைவேவிஸ், ராயப்பன்பட்டி, தேவாரம், போடி உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என அறிவிக்கும்போதெல்லாம், இங்கு மட்டுமே அதிக மழை கிடைக்கும். தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தினால், அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக காலை வேலைகளில் அதிகமான சரக்கு லாரிகள், டூவீலர்கள், ஆட்டோக்கள் சாலைகளை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பனி மூட்டம் காலை 7.30 மணி வரை இது நீடிக்கிறது. இந்த பனிமூட்டம் ஜனவரி வரை நீடிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : fog motorists ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...