×

நிபந்தனைகளை மீறி பட்டாசு கடைகள்

கூடலூர், நவ. 13: தீபாவளி பண்டிகைக்காக கம்பம் மற்றும் கூடலூரில் ஏராளமான இடங்களில் பட்டாசு விற்பனை கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கடைகள் வைப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.தீயணைப்புக்குத் தேவையான தீயணைப்பு கருவிகள், தண்ணீர், மணல் ஆகிவற்றை கடைக்கு முன் குறிப்பிட்ட அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள்  உள்ளன. ஆனால், இந்த கடைகள் தடையில்லா சான்றோ, மேற்கண்ட நிபந்தனைகளோ எதுவும் இன்றி செயல்படுவதாகவும், அதிகாரிகள் கடையை நேரில் பார்வையிட்டு அனைத்து நிபந்தனைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Fireworks shops ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 7,200 பட்டாசு...