×

போதிய வருமானம் இல்லாததால் வியாபாரம் இன்றி களையிழந்த தீபாவளி

தொண்டி, நவ.13:  தொண்டி மற்றும் சுறறுவட்டார பகுதியில் போதிய மழை இல்லாததால் வருமானமின்றி கிராமமக்கள் தீபாவளிக்கு ஆடை உள்ளிட்ட பொருள்கள் வாங்க வராததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி இம்மக்கள் உள்ளனர். கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் தீபாவளி மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இம்முறை பருவமழை சரியாக பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் சில மாதங்களுககு முன்பு விதைத்து மழை இல்லாமல் பயிர் கருகி வீணாகி விட்டதால் அதிலும் ஏகப்பட்ட செலவு. இதனால் தீபாவளிக்கு ஆடைகள், மளிகை சாமான்கள் வாங்க கூட்டம் இல்லை. இது வியாபாரிகளுககு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த மககள் இப்போது தான் வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் தீபாவளிககு செலவு செய்வதில் சிககல் ஏற்ப்பட்டுள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறியது, ‘‘தீபாவளிககு சில நாள்களே உள்ள நிலையில் வியாபாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கூட்டம் அதிகமாக இருகக வேண்டிய நேரத்தில் கடை வீதிகள் வெறிச்சோடி கிடககிறது. அதிக முதலீட்டை போட்டு பொருள்களை வாங்கி வைத்துள்ளோம். மழை இல்லாததால் கிராம மக்கள் செலவு செய்ய பயப்படுகின்றனர். இதனால் வியாபாரிகளுககு நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர். விவசாயி முருகேசன், ‘‘மழை நல்லா பெய்தால் நம்பி செலவு செய்து விடலாம். இம்முறை இரண்டு முறை விதைக்க வேண்டியதாகி விட்டது. அதிலும் அதிக செலவு செய்து விட்டோம். தற்போது வருமானம் இல்லாத நிலையில், தீபாவளிக்கும் வேறு செலவு ஏற்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே கடன் வாங்கும் யோசனையில் உள்ளோம்’’என்றார்.

Tags : Deepavali ,
× RELATED தீபாவளி ஸ்பெஷல் கிராமத்து மட்டன் வறுவல்!