×

சூலப்புரம் கொலை வழக்கு உலைப்பட்டி மக்கள் போராட்டம் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

உசிலம்பட்டி, நவ.13: சூலப்புரம் ெகாலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உலைப்பட்டி கிராமமக்கள் போராட்டம் நடத்தினர். எழுமலை அருகே சூலப்புரத்தில் செல்லாண்டியம்மன்கோவில் கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து உசிலம்பட்டி ஆர்டிஓ தலைமையில் இருபிரிவினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் அதிகாரிகளின் கட்டுப்பாடுகளுடன் செல்லாண்டியம்மன்கோவில் திருவிழா நடைபெற்றது. கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த செல்லத்துரை(45) என்பவர் அக்.13ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து கொலையாளியை கைது செய்யக்கோரி கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.

செல்லத்துரை மனைவி மலர்கொடி கொடுத்த புகாரின்பேரில் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் உலைப்பட்டியை சேர்ந்த அழகர்(49), செல்லப்பன்(55), தங்கப்பன்(45) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நேற்று உலைப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜன், எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Ulaipatti ,
× RELATED எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்...