நத்தம் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் கடைகள், ஆட்டிறைச்சி கூடம் ஏலம்

நத்தம், நவ. 13: நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் பஸ்நிலைய கடைகள், ஆட்டிறைச்சி கூடம், சைக்கிள் ஸ்டாண்ட், பொது கழிப்பறை உள்ளிட்டவைகளுக்கு ஏலம் நடந்தது. செயல்அலுவலர் சரவணக்குமார் தலைமை வகிக்க, தலைமை எழுத்தர் பிரசாத் முன்னிலை வகித்தார். ஏலத்தில் கடந்த ஆண்டில் விடப்பட்ட தொகைகளை காட்டிலும் குறைவாக கேட்டனர். பின்னர் செயல்அலுவலர் கூறியதாவது, ‘கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைவான தொகைக்கு கேட்கப்பட்டதால் ஏல விபரம் குறித்து தனி அலுவலருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் ஏலதாரர்கள் கேட்ட தொகைகளுக்கு அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதில் இளநிலை உதவியாளர் அழகர்சாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>