×

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை கைப்பற்றும் வேலுச்சாமி எம்பி பேட்டி

நத்தம், நவ. 13: நத்தம்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எம்பி நிதியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதனை பார்வையிட நத்தம் வந்த எம்பி வேலுச்சாமி நிருபர்களடம் கூறுகையில், ‘நத்தம், கன்னியாபுரம், கொசவபட்டி, ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தேர்தல் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக காணொலி காட்சி மூலம் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், முகவர்கள் வாக்குச்சாவடிகளில் எப்படி பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. தமிழக மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும்’ என்றார். உடன் ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags : alliance ,DMK ,assembly elections ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு