×

தீபாவளியையொட்டி அசம்பாவிதத்தை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு

பொள்ளாச்சி, நவ.13: தீபாவளியையொட்டி பொள்ளாச்சி நகரில் அசம்பாவிதத்தை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி நகரில் உள்ள வணிக வளாகம் நிறைந்த கடைவீதி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, இமாம்கான் வீதி, வெங்கட்ரமணன் வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி துணிகள், இனிப்பு வகைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கென நகர் பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கடை வீதி, சத்திரம் வீதி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு என முக்கிய வீதிகள் சந்திக்கும் இடங்களில் டிவைடர்கள் அமைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் போலீசார் நின்று போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் நேற்று நகரில் உள்ள கடைகளில் துணி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வாங்க வந்தோர் கூட்டம் கடந்த அதிகமாக இருந்துள்ளது. மேலும் திருட்டு, குற்றச்சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உடுமலை ரோடு-போலீஸ் ஸ்டேஷன் ரோடு சந்திப்பு, எஸ்.எஸ்.கோவில் வீதி, தேர்நிலை புதிய பஸ் நிலையம் அருகே என மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் சுமார் 25 அடி உயரத்துக்கு கோபுரம் அமைக்கப்பட்டு அதிலிருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.n நேற்று உடுமலை ரோடு, வெங்கட்ரமணன் வீதி, நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். காலை முதல் இரவு வரை என போலீசார் வாகன நெரிசலை சீர்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். மேலும் முக்கிய ரோடுகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி சென்றிருந்ததால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்றும் நகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : places ,Diwali ,incidents ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்