×

 கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதலாமாண்டு பொறியியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கு நெறிப்படுத்துதல் நிகழ்ச்சி

கோவை, நவ. 13:  கிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி இணையதளம் மூலமாக நேற்று நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் (சென்னை பிரிவின்) துணைத் தலைவர் சுஜித்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில்  கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சிறப்பை எடுத்துரைக்கும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் அறங்காவலர்  மலர்விழி, முதல்வர் ஜேனட், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் னிவாசன் ஆளவந்தார்,  அறிவியல் மற்றும் மானுடவியல் துணைத் தலைவர்கள் ராகவி, சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Krishna Educational Institutions First Year Engineering and Technology Students Orientation Program ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி