×

ஜவுளி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

ஈரோடு, நவ.13:  ஈரோட்டில் ஜவுளி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜவுளிகளை வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். இதனால், நேற்று மதியம் முதல் இரவு வரை கடை வீதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதில், ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, நேதாஜிரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன்கோவில் வீதி, கனிமார்க்கெட், திருவேங்கடசாமி வீதி, பிரப்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

மேலும், சாலையோரம் குறைந்த விலையில் சட்டை, சேலை, குழந்தைகளுக்கான துணிகள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், கடை வீதிகள் மட்டும் அல்லாது மாநகரின் பிற பகுதிகளிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. கடை வீதிகளில் மக்கள் கூட்டத்தில் மர்மநபர்கள் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களை தடுத்திட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
மேலும், மக்கள் கூட்டத்தில் போலீசார் சிலர் ஆங்காங்கே மப்டியில் மர்மநபர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். பொதுமக்கள் அவர்கள் கொண்டு வரும் பணம், நகைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என 10 நிமிடத்திற்கு ஒரு முறை போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வந்தனர்.

Tags : Crowds ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...