×

அனுமதித்த இடத்துக்கு பதிலாக மாற்று இடத்தில் பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

ஈரோடு, நவ.13: அனுமதி  வழங்கப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தில் பட்டாசு கடை வைத்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு காவல்துறை, வருவாய்துறை, தீயணைப்புதுறையினருக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பத்தின் அடிப்படையில் இடம் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும், தீபாவளியையொட்டி 90 தற்காலிக பட்டாசு கடைகளுக்கும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அனுமதி பெறப்பட்டுள்ள இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தில் பட்டாசு கடை வைப்பது, தடை செய்யப்பட்ட வெடிகளை விற்பனை செய்வது, மளிகை கடைகளில் கொடுத்து விற்பனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags : firecracker shop ,location ,
× RELATED ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்!